தமிழ்நாட்டில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,88,284 ஆக உயர்ந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,912 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,423 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,37,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 14,570 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் கோவையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 150 பேருக்கும் கோவையில் 130 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்கும் குறைவானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.