29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் தமிழகம்

கற்றல் இடைவெளியை போக்கவே, இல்லம் தேடி கல்வித் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைப் போக்கவே இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான வாகனங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். “இழந்த கல்வியை மீட்க, இல்லம் தேடி கல்வி” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட விழிப்புணர்வு வாகனங்களின் செயல்பாடு, பயிற்சி பணிமனை, தன்னார்வலர்களுக்கான இணையதளம் ஆகியவற்றையும் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை போக்கவே, இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தன்னார்வலர்களின் முயற்சியுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்த தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம் என்றும், 5 மணி முதல் 7 மணி வரை இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் பாடம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

நவம்பர் மாதம் தொடங்கி, 6 மாத காலத்துக்கு இல்லம் தேடிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நவம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை சோதனை முயற்சியாக 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பின்னர், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

ஓமன் திமுக சார்பாக 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

Vandhana

குறைந்தது தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலை; ரூ.10 வரை விலை குறைப்பு

Ezhilarasan

நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

Vandhana