கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ஷங்கர் ராவ் இன்று காலமானார். அவருக்கு வயது 84.
மூத்த நடிகர் சங்கர் சாவ் அவரது நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு பெயர் போனவர். பிரபல காமெடி தொடரான ’பாப்பா பண்டு’ என்ற சீரியலில் பாஸ் பலராஜூ என்ற காமெடி கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது டைமிங் காமெடி, சீரியல் டிஆர்பியை ஏற்ற முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் இன்று காலமானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஷங்கர் ராவின் மரண செய்தி அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.