தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடையும் நிலையில், கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.







