பன்னாட்டு போட்டிகளை நடத்தும் சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகத்தில் கடந்த 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் எகிப்து வீரர் அலி அபோ மற்றும் பைரோஸ், மலேசிய வீரர்களை வீழ்த்தினார். இதன் மூலம் மலேசியாவை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார். முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பையை வழங்கிய பின்னர் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிறகு பன்னாட்டு போட்டிகளை நடத்தும் சிறந்த இடமாக தமிழ்நாடு விளங்குகிறது எனவும் கூறினார். இந்தியாவிலேயே முதன்முதலாக சர்ஃபிங் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.









