தமிழ்நாடு 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடனில் இருப்பதும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள அண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டம் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் 19%
பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தில் தொழில் உயரலாம், சம்பளம் உயரலாம் ஆனால் தமிழகத்தில்
மது விற்பனை 22% உயர்ந்துள்ளது. இதுதான் தமிழகத்தில் திராவிட மாடல்
ஆட்சியின் சாதனை.
தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக மட்டுமின்றி, குடிகார மாநிலமாக மாற்றிய பெருமை முதலமைச்சர் ஸ்டாலினையே சாரும் எனவும் அவர் சாடினார். மேலும், தனித்தமிழ்நாடு வேண்டுமென்று பேசிய திமுக, இன்று பிரதமர் மோடியை எதிர்ப்பதற்காக I.N.D.I.A கூட்டணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய காமெடி எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.







