முக்கியச் செய்திகள் தமிழகம் Health

மருத்துவத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமே – வடமாநில பெண் நெகிழ்ச்சி

தமிழ்நாடு, மருத்துவத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்பதற்கு சான்றாக வடமாநில பெண் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளே பெரும்பான்மையாக மாறி மாறி ஆட்சி செய்தன. இந்த மூன்று கட்சிகளின் ஆட்சியிலுமே கல்விக்கும் மருத்துவத்திற்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச பாடப்புத்தகங்கள், மடிக்கணினி, பஸ் பாஸ், சைக்கிள், என கல்விக்கான திட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கல்வி ஒருபுறம் என்றால், மருத்துவம் மறுபுறம். அம்மா மருந்தகம், அம்மா மினி க்ளீனிக், மக்களைத் தேடி மருத்துவம், என மருத்துவத்திற்கான திட்டங்களின் பட்டியலும் நீள்வதைக் காண முடிகிறது. தமிழ்நாடு மருத்துவத்தில் முதன்மை மாநிலமாக  திகழ்கிறது என்பதற்கு சான்று கூறும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட மாநில பெண் ஒருவர் பேசியுள்ளார்.

”என் பையனுக்கு பிறந்ததிலிருந்து ஒரு வருஷமா காதும் கேட்கல. வாய் பேசவும் முடியல. எனக்கும் அது தெரியல. காரணம் அவன் என்னோட முதல் குழந்தை. உன் பையன் அம்மா, அப்பா-னு கூப்பிடுறானா-னு பக்கத்து வீட்டிலிருந்த தமிழ்க்கார அக்கா தான் கேட்டாங்க. நான் இல்லனு சொன்னேன். உன் பையன் விளையாடும்போது பின்னால ஒரு பாத்திரத்தை கீழே போடு. அவன் திரும்பி பார்க்குறானா பாருனு அவங்க சொன்னாங்க. நானும் அத செஞ்சு பார்த்தேன். அவன் திரும்பி பார்க்கல.

டாக்டரை பாத்தோம். ரிபோர்ட்ல என் பையனுக்கு காதும் கேட்காது, வாய் பேசவும் முடியாதுனு வந்துச்சு. எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல. டாக்டர் கிட்ட என்ன செய்யலாம்னு கேட்டேன். உங்களுக்கு ரேஷன் கார்டு இருக்கானு கேட்டாங்க. என் கிட்ட அப்போ இல்ல. ரேஷன் கார்டு இருந்தா CM Scheme-ல ஆப்ரேஷன் பண்ணலாம்னு டாக்டர் சொன்னாங்க.

ரேஷன் கார்டு வாங்குறதுக்கு 4 வருஷம் ஆயிடுச்சு. கடைசில எல்லா டாக்குமெண்ட்டையும் டாக்டர் கிட்ட கொடுத்தோம். சென்னையிலே என்னோட பையனுக்கு ஃப்ரீயா ஆப்ரேஷன் பண்ணோம். தமிழ்நாடு அரசுக்கு நான் ரொம்ப நன்றி சொல்றேன். என்னோட ஊர்ல இருந்திருந்தா என் பையனுக்கு ஆப்ரேஷன் பண்ணிருக்க முடியாது. தமிழ்நாட்டுல எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சுருக்கு. 6 லட்ச ரூபா செலவாகும் ஆப்ரேஷன், ஃப்ரீயா என் பையனுக்கு கிடைச்சுருக்கு. இன்னைக்கு என் பையன் அம்மா, அப்பா-னு கூப்பிடுறான்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

Gayathri Venkatesan

மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

Jayasheeba

சோனியாவுக்கு மூச்சுக் குழலில் பூஞ்சை தொற்று பாதிப்பு

Halley Karthik