தமிழகத்தில் ஒரே நாளில் 505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மேலும் 505 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 145 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 956ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.ஒரே நாளில் 526 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 575 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







