அதிமுக – பாஜக கூட்டணி உறுதி -ஜெ.பி.நட்டா

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உறுதிபடத் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய, ஜெ.பி.நட்டா, சுமார் ஐந்தரை லட்சம் கோடி…

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய, ஜெ.பி.நட்டா, சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்திற்கு மறுக்கப்பட்டு வந்த நியாயம் பாஜக அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்திற்கு அதிக அளவில் உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாகவும் ஜெ,பி.நட்டா தெரிவித்தார். தமிழ் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி அதிக மதிப்பு கொடுத்து வருவதாகக் கூறிய ஜெ.பி.நட்டா, திருக்குறளை தனது பேச்சில் மோடி அடிக்கடி மேற்கோள் காட்டுவதையும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்றும் கூறிய அக்கட்சியின் தலைவர், பாஜக- அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதை உறுதிபடுத்தினார். இனி வரும் தேர்தல்களில் அதிமுக மற்றும் ஒருமித்த கருத்துகள் கொண்ட கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கும் என்றும் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply