தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதும், பாதிப்புகளை தணிப்பதும் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும்.
காலநிலை மாற்ற இயக்கத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான அலகு ஒன்று மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாநில அளவிலான திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும். காலநிலை மாற்றம், கண்காணிப்பு, சுற்றுச்சூழல் இலக்கு குறித்து விவாதிக்கப்படும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திட்ட இயக்குநராகவும், மாவட்ட வன அதிகாரி மாவட்ட காலநிலை அதிகாரியாக செயல்படுவார். இதனை செயல்படுத்த ஒரு மாவட்டத்திற்கு 10 லட்சம் வீதம் 38 மாவட்டங்களுக்கு ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.








