குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.
திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய குஷ்பு, அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாகத் தாக்கி, ட்விட்டரில் களமாடினார். ஆனால், அவர் சமீபத்தில் பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், இன்று நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
On #GuruPurnima2022 today I have to thank one person who brought me into politics, taught me about humanity, equality, political grace & always said nothing is greater than self respect. #DrKalaignar he will always be remembered &held in highest esteem in my eyes. நன்றி அப்பா 🙏 pic.twitter.com/szOtv2ckza
— KhushbuSundar (@khushsundar) July 13, 2022
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் குணமடைய ஆளுநர் வாழ்த்து’
“இன்று குருபூர்ணிமா – அன்று, என்னை அரசியலுக்கு அழைத்து வந்து, மனிதாபிமானம், சமத்துவம், அரசியல் கருணை, சுயமரியாதையை விடச் சிறந்தது எதுவுமில்லை என்று சொல்லிக் கொடுத்த ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். #DrKalaignar அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். நன்றி அப்பா” என தெரிவித்துள்ளார்.







