முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் கார் கவிழ்ந்து விபத்து, ஓடிச்சென்று உதவிய இளைஞருக்கு குவியும் பாராட்டு

விபத்தில் கார் கவிழ்ந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் ஓடி சென்று உதவியதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை தானப்பமுதலியார் பகுதியை சேர்ந்த ஹரிராம். இவர் துவரிமான் பகுதியிலுள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு நேற்றிரவு காரில் திரும்பிக் கொண்டி ருந்தார். கோச்சடை பகுதியில் வரும்போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்றார். அப்போது அருகில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க ப்ரேக் பிடித்த கார் எதிர்பாராதவிதமாக தடுப்புச் சுவர் மீது ஏறி கவிழ்ந்தது.

அந்த பகுதியில் நடந்துசென்ற இளைஞர் ஒருவர் இதைக் கண்டதும் சற்றும் யோசிக்காமல் வேகமாக ஓடிச்சென்று தன் கைகளால் காரை கவிழ்ந்துவிடாமல் பிடித்தார். இதனைய டுத்து அருகில் உள்ளவர்கள் ஓடிச்சென்று காரை கவிழ விடாமல் சரி செய்தனர். பின்னர் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் அதை மீட்டு காரில் இருந்தவரை மருத்துவமனைக் கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திடிர்நகர் போக்குவரத்து காவல்துறையினர் விசார ணை நடத்தி வருகின்றனர்.

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கார் விபத்தை பார்த்து உடனடியாக ஓடிச்சென்று உதவிய இளைஞரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

திட்டமிட்டபடி ஐபிஎல் டி20 தொடர் நடைபெறும் : சவுரவ் கங்குலி

Halley karthi

அரசியலில் இருந்து ஒதுங்கியது ஏன்? சசிகலா விளக்கம்!

Ezhilarasan

சென்னை, புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை

Ezhilarasan