தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது – மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்…!

தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத தமிழ் நாடு ஆளுநரின் செயல்பாடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து அக்கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தமிழ் நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமக்க உரிமை கோரினார். ஆனால் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வில்லை. இதற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளுநர் செயல்பாடு குறித்து மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ;

தவெகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். தமிழ் நாடு ஆளுநர் சட்டம் அறிந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் ஆளுநர் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார்கள். அதிமுக – திமுக இணைய வேண்டும் என ஆளுநர் தாமதம் செய்கிறார் என பத்திரிகை செய்தி மூலம் அறிந்தேன்.

தேர்தலுக்கு பின்பு எவருக்கும் அருதி பெரும்பான்மை இல்லை என்றால் எந்த கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மேலும் பெரும்பான்மையை ஆளுநர் அலுவலகத்தில் நிரூபிக்க வேண்டியது இல்லை. சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

மேலும் சட்டமன்றத்தில் அருதி பெரும்பான்மை இல்லை என்றாலும் சட்டமன்றத்தில் வேறு கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தார்கள் என்றாலும் பெரும்பான்மை அடிப்படையில் ஆட்சி தொடர முடியும்.

பாஜகவின் நடவடிக்கைக்காக ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். பெரும்பான்மை உறுப்பினர்கள் பட்டியலை அவர் கேட்க முடியாது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சட்ட நிவாரணம் கோரி தவெக எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகலாம். ஆளுநர் தவெக கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.