திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டு கிரிவலம் சென்றார். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாதுக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்தார். இன்று…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டு கிரிவலம் சென்றார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
சாதுக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்தார். இன்று காலை தனது குடும்பத்துடன் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மனை தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பாதாள லிங்கம் உள்ளிட்ட இடங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் நான்காவது லிங்கமாக இருக்கக்கூடிய நிருதி லிங்கத்திலிருந்து குடும்பத்துடன் ஆளுநர் நடந்து சென்று கிரிவலம் மேற்கொண்டார். அப்போது மண்பாண்டம் தொழில் செய்வது குறித்து கேட்டறிந்த ஆளுநர் தானே மண்பாண்டத்தைச் செய்து பார்த்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.