விரைவில் ‘STR 48’ அப்டேட்  – இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் வைரல் ட்வீட்!

விரைவில் ‘STR 48’ அப்டேட் வரும் என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.  நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு…

விரைவில் ‘STR 48’ அப்டேட் வரும் என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார். 

நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.  படத்தின் பெயர் அறிவிக்கப்படாததால் தற்காலிகமாக சிம்பு #48 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை துல்கர் சல்மான் , ரிது வர்மா மற்றும்  ரக்‌ஷன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்  படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ”ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்” தயாரிக்க உள்ளது.

இது குறித்து படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி “ இது ஒரு வரலாற்று படமாக இருக்கும், எல்லா வயதினருக்கும் பிடித்த ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதுபோல சிம்புவின்  இன்னொரு பக்கத்தைக் காட்டும் விதமாக இப்படம் அமையும் . மேலும் இது பெரிய பட்ஜெட் படம் என்பதால், தயாரிப்புக்கு முன்னர் அதிக நேரம் தேவை. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதனால் படப்பிடிப்பு தொடங்க சில நாட்களாகும்” என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/RKFI/status/1660458682277330944

இந்நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 மாதங்களாகியிம் அடுத்த அப்டேட் எதுவும் வராத நிலையில், சமூக வலைத்தளம் மூலம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் ரசிகர்கள் ஒருவர் ‘STR 48 அப்டேட் எப்போது’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, ‘விரைவில்’ என கூறியுள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் STR 48 படத்தின் அப்டேட்டிற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.