தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் எனக்கூறி நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் முலம் டெல்லி புறப்பட்டு சென்ற அவர், அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி பயணத்தை முடித்து விட்டு வரும் 9ஆம் தேதி இரவு ஆளுநர் சென்னை திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று திரும்பிய 5 நாட்களில் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisement: