முக்கியச் செய்திகள் குற்றம்

கடன் தகராறு; 15 வயது சிறுவன் கொலை

மணப்பாறை அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் அரிவாளால் தாக்கப்பட்டு 15 வயது சிறுவன் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற ராமலிங்கத்தின் இளைய மகனிடம் இருந்து வெள்ளையமாள் மற்றும் அவரது ஆண் நண்பரான பச்சமுத்து ஆகியோர் இருச்சக்கர வாகனத்தை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராமலிங்கம் தனது இரு மகன்களுடன் சென்று இருசக்கர வாகனத்தை தருமாறு கேட்டபோது இருத்தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பச்சைமுத்து ராமலிங்கத்தை அரிவாளால் தாக்க முயன்றபோது அருகில் இருந்த ராமலிங்கத்தின் இளைய மகன் தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவனை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பச்சமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Advertisement:
SHARE

Related posts

வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

Halley Karthik

மாணவரை துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியர் மீது புகார்.

Ezhilarasan

ஜெய்பீம்; இழப்பீட்டுத்தொகை முழுமையாக பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் – பாமக

Halley Karthik