பெண்கள் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவ்வையார்
சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா , துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பு, கல்வியில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு, கிராமப்புற பெண்களுக்கு சுய உதவி குழு, உள்ளிட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காக, திராவிட முன்னேற்றக் கழக அரசு படிப்படியாக ஏற்ற நிலையை உருவாக்கி அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அடைய செய்துள்ளது. அவர்களின் உரிமைக்காகவும்
பாடுபட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முதலில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பெண்களுக்கு தொழில் பயிற்சி , சுய உதவி குழு கடன் தள்ளுபடி, புதிய சுய உதவி குழுக்கள் உருவாக்கம், தொழில் பயிற்சி மானிய கடன் போன்ற மகளிருக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். செயல்படுத்தியும் வருகிறார். கைம்பெண் நலவாரியம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பெண்களின் நலனுக்காகவும் வாழ்வில்
ஏற்றம் பெறவும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இன்றைய தினம் முதலமைச்சர் தலைமையில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.அனைத்து பெண்களும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும், பெரியார் கண்ட புரட்சி பெண்ணாகவும் கலைஞர் திட்டத்தில் பயனடையவும், முதலமைச்சர் திட்டத்தில் தொழிலில் முன்னேற்றம் அடையவும் வேண்டும். நிச்சயம் அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்த அமைச்சர் கீதா ஜீவன், அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளையும் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா