தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் தமிழ்நாடு சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை வரும் 17ம் தேதி கூடுகிறது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை அன்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து 2026-27 க்கான முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவு மானிய கோரிக்கை 20 ஆம் தேதி வாசிக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.







