முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழில் குடமுழுக்கு நன்னீராட்டு நடத்துவதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் – பேரூர் ஆதினம் கோரிக்கை

தமிழில் குடமுழக்கு நன்னீராட்டு விழா நடத்துவதற்கான வழிமுறைகளையும், அரசாணைகளையும் பிறப்பிக்க தமிழக அரசுக்கு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோரிக்கை வைத்துள்ளார்.

இன்று பல்லடத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ் வழிபாடு என்பது இரண்டாயிரம் ஆண்டு பழமையானது. காரைக்கால் அம்மையார் தொடங்கி நடைபெற்று வருகிறது. அது சற்று தளர்ந்த போது மீண்டும் 1954இல் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாக்களை தமிழிலேயே நடத்துவது என்கின்ற அடிப்படையில் பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் போன்றவை குன்றக்குடி அடிகளார் அவருடைய வழிகாட்டலில் வண்ணம் தொடங்கின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதைத் தொடர்ந்து பெரும் திருக்கோயில்களையும் இதுபோல் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்த வேண்டும் என்று சொல்லி பல அமைப்புகள் பொது நல வழக்குகள் மூலமாக நீதிமன்றத்தை அணுகினார்கள்.

அந்த வகையிலே தஞ்சை பெரிய கோயிலில் இருக்கக்கூடிய பெருவுடையார் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவின் போதும் தமிழிலேயே நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதை முறையாக நடத்துவதற்கான வாய்ப்பு அமையவில்லை. கரூரில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றபோது அங்கே இருக்கக்கூடிய அன்பர்கள்தான் பொதுநல வழக்காக மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். அப்பொழுது இரண்டு நீதிபதிகள் அமர்வு கிருபாகரன் அவருடைய தலைமையில் இருக்கக்கூடிய நீதிபதிகள் அங்கே கூடி இருந்து ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திருக்கோயிலிலே தமிழிலேயே வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு ஒரு அறிவுறுத்தலையும் சொன்னார்கள். அப்படி தமிழ் வழிபாடு செய்வதற்கு உண்டான செயல்முறைகளை தமிழக அரசு வகுத்து தரவேண்டும் என்று ஏற்கனவே கேட்டிருந்தார்கள். ஏற்கனவே 2006லேயே அறிக்கைகள் பயிற்சிப் பள்ளியின் மூலமாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது. முறையான திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அரசு ஒரு குழு அமைத்து அதன் மூலமாக இந்த செயல் முறைகளை வகுத்துக் கொடுங்கள் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு அதை வழிகாட்டினார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை தமிழ் வழிபாட்டில் ஈடுபாடு இருக்கக்கூடிய அன்பர்கள் குன்றக்குடி அடிகளார் உடைய தலைமையிலே பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், சத்திவேல், முருகன் சுகிசிவம்,குமரலிங்கம் போன்று இருக்கக்கூடிய அன்பர்கள் எல்லாம் கொண்ட ஒரு குழுவை வைத்து எப்படி ஒரு திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது என்று ஒரு செயல் முறைகளை வகுத்து தர கேட்டார்கள்.

அந்த அடிப்படையிலே நாங்கள் செய்தித்தாள்கள் மூலமாக கேட்டிருந்தோம் செய்தித்தாள்கள் மூலமாக வந்த செய்திகள் மிகக் குறைவான அளவிலேயே வந்த காரணத்தினால் ஒவ்வொரு பகுதியாகச் சென்று அதற்கான அந்த செயல் முறைகளை கேட்பது என்கின்ற அடிப்படையில் பல ஊர்களிலே சென்று அதற்கு உண்டான கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அண்மைச் செய்தி : தொழில்நுட்ப வளர்ச்சியை மீட்டெடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது – அமைச்சர் மனோ தங்கராஜ்

திருநெல்வேலி,மதுரை, திருச்சி, கோவை, சென்னை ஆகிய 5 இடங்களில் அந்த பகுதியிலே தமிழிலேயே வழிபாடு செய்யக் கூடியவர்கள் எந்த செயலை முதலில் செய்கிறார்கள் என்ற வழிமுறையை எல்லாம் அவரவர் செய்யக்கூடிய முறைக்கேற்ப எல்லோர் இடத்திலிருந்தும் பெறப்பட்டு அவை எல்லாம் தொகுத்து வகுத்து நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

அறநிலையத்துறைக்கு அரசு அதை ஒரு சட்ட மூலமாக நெறிப்படுத்தி மீண்டும் அதை நம்முடைய உயர்நீதிமன்றத்திற்கு தர இருக்கின்றது. அதற்குண்டான வகையிலே தான் தமிழ்வழிபாடா? பிறமொழி வழிபாடா என்பது கருத்து கேட்பு நோக்கமல்ல. தமிழ் வழிபாட்டை எந்த வழிமுறையில் செய்கிறீர்கள் என்பதுதான் உயர்நீதிமன்றம் நமக்கு கேட்டு இருக்கக்கூடிய ஒர் அறிவுறுத்தல். இந்த வகையில் எந்தெந்த மன்றங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையாக செய்வார்கள் அந்த அமைப்புகள் செய்யக்கூடிய முறையை கேட்பதற்காக தான் இந்த கூட்டங்கள் அங்கங்கே நடைபெறுகின்றன. இவ்வாறு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்

G SaravanaKumar

கேலி செய்தவர்களுக்கு நடிப்பால் பதில் கூறியுள்ளேன்: ‘டாணாக்காரன்’ கார்த்திக்

G SaravanaKumar

200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றிபெறும்: உதயநிதி ஸ்டாலின்

Halley Karthik