கிருஷ்னகிரி மாவட்டம் பாரூர் ஏரியில் இருந்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட எம்.பி,எம்.எல்.ஏக்கள் இன்று துவங்கி வைத்தனர்.
81.464கோடி திட்ட மதிப்பில் சுமார் 15.95 கிமீ நீளத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பாரூர் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள 33 ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்.நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்,ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தனர்.விவசாய பெருமக்களின் 20 ஆண்டு கால கனவு திட்டம் நிறைவேற உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-வேந்தன்







