நீட் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு : மத்திய அரசின் குழுவிடம் முதலமைச்சர் விஜய் உறுதி!

உயர்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் (NEET) அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு மத்திய அரசின் தேர்வுச் சீர்திருத்தக் குழுவிடம் முதலமைச்சர் விஜய் எதிர்ப்புத் தெரிவித்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜயை தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டப் பணிக்குழுவின் தலைவர்நந்தன் நிலேகனி, உறுப்பினர்கள் பேராசிரியர் காமகோடி, அனிதா கர்வால், சங்கர் மருவாடா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, உயர்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் (NEET) அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களையே சேர்க்கைக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. நீட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளை எதிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று நீட் தேர்விற்கு எதிராக சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மருத்துவப் படிப்புகள் மற்றும் பிற உயர்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இந்நிகழ்வில், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.