மாலை 4 மணி வரை தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 4) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை பொருந்தும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.