முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை -வி.கே.சிங்

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு
ஒப்படைக்கவில்லை என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமான மூலம்
மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறை இணைஅமைச்சர் வி.கே.சிங்
செய்தியாளர்களை சந்தித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர்,  மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் சேவை நடத்திக் கொள்ள விமான சேவை நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு வேண்டுமென்றாலும் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம் என்றார்.


மேலும், சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது குறித்த கேள்விக்கு,  அறிவித்தால் தான் சர்வதேச விமான நிலையம். இல்லை சுங்க இலக்க சேவை இருந்தால் சர்வதேச விமானங்கள் வந்து செல்லலாம். மதுரை விமான நிலையத்தில் சுங்கலாக்கா சேவை உள்ளதால் சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றன. விமானங்கள் அதிகமாகும் பட்சத்தில் அது குறித்து ஆலோசிக்கலாம் என கூரினார்.

அத்துடன், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு, விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அதனை செயல்படுத்தி கடைபிடிக்க வேண்டியது பொதுமக்கள் தான் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எழுத்தாளர் கி.ராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:முதல்வர் ஸ்டாலின்!

துப்பாகிச் சூடு எதிரொலி; இந்திய கடற்படையை கண்டித்து போஸ்டர்

EZHILARASAN D

அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா

Arivazhagan Chinnasamy