பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்லும் தமிழ்நாடு பெண் ரயில்வே லோகோ பைலட்!

டெல்லியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாடு பெண் ரயில்வே லோகோ பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக்…

டெல்லியில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தமிழ்நாடு பெண் ரயில்வே லோகோ பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து மோடி பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா இதுவரை 2 லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத்,  ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார்.  ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது.  சென்னை – விஜயவாடா,  சென்னை – கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.