பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை; அமைச்சர்

கடந்த ஆண்டு போல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமெனவும், தள்ளிப்போக வாய்ப்பு இல்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 54-வது…

கடந்த ஆண்டு போல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமெனவும், தள்ளிப்போக வாய்ப்பு இல்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 54-வது தேசிய நூலக வார விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகர்களுக்கான நல் நூலகர் விருதை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

மேலும் குழந்தைகள் உதவி எண்களான 1098 மற்றும் 14417 ஆகியவை குறித்த ஸ்டிக்கர்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படுமெனவும் அவர் கூறினார். தனியார் பள்ளிகள் கொரோனா காலத்தில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும், பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு வினாத்தாள் கடந்த ஆண்டுகளைப் போலவே இருக்குமென்றும், பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.