இன்று அமெரிக்கா புறப்படுகிறார் முதலமைச்சர் #MKStalin – எத்தனை நாட்கள் பயணம்? திட்டம் என்ன?

முதலீடுகளை ஈட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு  விமானம் மூலம்…

முதலீடுகளை ஈட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு  விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்படுகிறார்.

அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழ்நாடு தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் குறித்த முழுவிவரம் :

  • ஆக.27 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 10 மணிக்கு விமானம் மூலம் துபாய் வழியாக அமெரிக்கா செல்கிறார்.
  • அமெ­ரிக்க துணத்  தூதர் கிறிஸ்­டோ­பர் ஹாட்­ஜஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
  • 500 நிறு­வ­னத் தலைமை நிர்­வா­கி­க­ளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திககிறார்.
  • ஆக. 28 – செப். 2ம் தேதி வரை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசுகிறார்.
  • ஆக. 29 – சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ‘இன்வெஸ்டர் கான்கிளேவ்’ என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை
  • ஆக.30 – புலம் பெயர் தமிழ்ர்களை சந்தித்து பேசுகிறார்.
  • செப். 2 – சான்பிரான்சிஸ்கோவில் இருந்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ செல்கிறார். அங்கிருந்தபடி அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை அவர் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார்.
  • சர்வதேச அளவில் சிறப்பாக இயங்கி வரும் பார்ச்சூன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுவார்.
  • செப். 7 – சிகாகோ ரிவர் ரோட்டில் உள்ள ரோஸ்மான்ட் அரங்கத்தில் வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம் மற்றும் அமெரிக்காவின் தமிழ்ச்சங்கங்கள் இணைந்து நடத்தும், ‘வணக்கம் அமெரிக்கா’ என்ற சிறப்பு நிகழ்ச்சியான மாபெரும் கலாசார விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
  • பின்னர் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

இதில் தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சிக்­காக பல புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெழுத்தா­கக் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. முதலமைச்சரின் அமெ­ரிக்க பயணத்­தை­யொட்டி, முன்­ன­தா­கவே அமெ­ரிக்கா சென்­றுள்ள தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா, சிகாகோ – அமெ­ரிக்க தமி­ழர்­க­ளு­ட­னான முதலமைச்சர் சந்­திப்பு நிகழ்ச்சி குறித்து அமெ­ரிக்க தமிழ் சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­கள், பிர­தி­நி­தி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.