திருமணம் எப்போது? ராகுல் காந்தி அளித்த சுவாரஸ்ய பதில்!

திருமண நிர்பந்தத்தை 30 ஆண்டுகளாக சந்தித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியிடம் பொதுவாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று அவரது…

When is the wedding? Interesting answer given by Rahul Gandhi!

திருமண நிர்பந்தத்தை 30 ஆண்டுகளாக சந்தித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியிடம் பொதுவாக வைக்கப்படும் கேள்விகளில் ஒன்று அவரது திருமணம். 54 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொது மக்களில் இருந்து ஒருவர், “எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, “விரைவில் நடக்கும்” என்று பதில் அளித்தார்.

தற்போது மீண்டும் கல்லூரி மாணவிகளுடனான உரையாடலின்போதும் ராகுல்காந்தியிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த உரையாடல் ஒன்றை ராகுல் காந்தி தன் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த உரையாடலில் “திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தம் வருகிறதா?” என்று மாணவிகளிடம் ராகுல்காந்தி கேட்கிறார். அவர்கள் அதே கேள்வியை ராகுல்காந்தியிடம் திருப்பி கேட்டனர்.

அதற்கு ராகுல்காந்தி, “திருமணம் செய்து கொள்ளுமாறு இருபது, முப்பது ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து வருகிறேன்” என்று புன்னகையுடன் கூறினார். ‘திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறீர்களா?” என்று மாணவிகள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி, “நான் திட்டமிடுவது இல்லை. அதுவாக நடந்தால் நடக்கும்” என்று கூறினார். ”எங்களையும் திருமணத்துக்கு அழையுங்கள்” என்று மாணவிகள் ஒரே குரலில் தெரிவித்தனர். “அழைக்கிறேன்” என்று சிரிப்பொலிக்கு மத்தியில் ராகுல்காந்தி கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.