அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற தமிழ்நாட்டு பிரபலங்கள்!

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.  அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இதனையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.  ராமர் சிலையின் பிரதிஷ்டையை…

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இதனையொட்டி அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.  ராமர் சிலையின் பிரதிஷ்டையை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் பின்னணி பாடகர்களான சங்கர் மகாதேவன் மற்றும் சோனு நிகாமின் கச்சேரி தொடங்கி நடைபெற்றது.

ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா துறையினர், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:  கொரோனா தொற்றுக்குப் பின் இணை நோய்கள் அதிகரிப்பு – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,  முன்னாள் பிரதமர் தேவகௌடா,  ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு,  நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.  நடிகர் ரஜினிகாந்த்,  நடிகர் தனுஷ்,  இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.