தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது- பொன் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள் மற்றும்…

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்துகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விதமான ஆய்வு கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் கபில் மோரேஸ்வர்
பாட்டில் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், ஐம்பது ஆண்டு காலமாக இசைத்துறையில் பயணித்த இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ராஜ்யசபா உறுப்பினராக கௌரவப்படுத்தியுள்ளார். இது தமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் மிகப்பெரிய பெருமை. பிரதமர் மோடி தமிழர்களை கௌரவப்படுத்தி உள்ளார். தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள் என்றார்.

மேலும், 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து பாஜக சார்பில் இரட்டை இலக்கு எண்ணுடன் எம்பிக்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்வார்கள். தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் பாஜகவின் அலை வீசுகிறது. தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது பாஜக அதிமுகவுடன் கொண்டுள்ள கூட்டணி தொடரும். அதிமுகவில் தற்போது நடந்து வரும் உள்கட்சி பிரச்சனைக்கு இரு தரப்பினரும் சுமூகமாக பேசி முடிவு செய்தால் களத்தில் அதிமுக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். தற்போது போதை களமாகவும், கலாச்சார சீரழிவாகவும் தமிழ்நாடு மாறி வருகிறது அரசு மதுபான கடைகளை அதிகம் தமிழ்நாடு அரசு திறந்து வருகிறது. அதனை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட தலைவர் கதிரவன், பொருளாளர் தரணி முருகேசன், முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் சுபநாகராஜன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.