இலங்கையில் தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளைப் பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20, 21-ஆம் தேதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டேட்டா சரிட்டி (DATA Charity), மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் இணைந்து நடாத்தும் இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்திலிருந்து (திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை) 1000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு விழாவுக்குப் பிரதான அனுசரணையை அபி டயமன்ட், ராஜ் கிளஸ்டர் மற்றும் லிங்க்ஸ் லீகல் ஆகிய நிறுவனத்தினர் வழங்குகின்றன. மட்டக்களப்பிலிருந்து 26 மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளும், அம்பாறையிலிருந்து 08 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும், திருகோணமலையிலிருந்து 04 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்றன.
அண்மைச் செய்தி: ‘மாமல்லபுரத்தில் கிளி ஜோசியத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது’
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத்தேவையாக உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட பராமரிப்பு நிலையம் உருவாக்க அனைவரும் இணைந்து உதவிடவேண்டும் என்ற பரப்புரையை இந்த ஆண்டு விளையாட்டு விழாவில் நாம் முன்வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியின் முதல் அங்கமாகப் பார்வை இழந்தவர்களுக்கான சத்த பந்து கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது . இந்த போட்டியில் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டியங்கும் உதயம் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும், யாழ் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் பங்கு பெறுகின்றனர் என டேட்டா சரிட்டி தெரிவித்துள்ளது.








