அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ.1000

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நடைப்பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 மாத உழைப்பின்…

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் நடைப்பெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழுமையான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில் தெரியவரும் என கூறியிருந்தார். அதன்படி, காலை 10 மணிக்கு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.

தமிழ்நாடு பட்ஜெட் சிறப்பம்சங்கள்:

  • இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.
  • தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு; வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும்.
  • ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வெல்லும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.
  • காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு;
  • ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள்.
  • மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மருத்துவ திட்டத்திற்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு.
  • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு ரூ.849.21 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு; சமூக நலத்துறைக்கு ரூ.5922.40 கோடி நிதி ஒதுக்கீடு.
  • வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவைகளுக்காக சென்னை ஆர்.கே நகரில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம் அமைக்கப்படும்
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,547 கோடி நிதி ஒதுக்கீடு
  • அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.