அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வில், தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நடைமுறையினை
பின்பற்றிடும் வகையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில், தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி உயர்கல்வித்துறை
உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக முதலாம் ஆண்டில் மட்டுமே தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டிருந்த
நிலையில், தற்போது B.Com., BBA., BCA., ஆகிய படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்விலும் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த பாடத்திட்ட மாற்றம் அமலுக்கு வருவதாகவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இரண்டாவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்படிருந்ததும், அமைச்சர் பொன்முடி , பொறியியல் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும் தமிழ் மொழிப்பாடம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.