சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று தங்களின் யோகா தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை.திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 175 பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று தங்களின் தனித்துவமான யோகா திறமைகளை வெளிப்படுத்தினர். 5 வயது முதல் 50 வயது வரையிலானவர்கள் பங்கேற்ற இப்போட்டிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற 3 நபர்களுக்கு பரிசுகளும்,பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடினமான யோகாசங்களையும் எளிமையாக செய்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இது தங்களின் யோகா திறமைகளை வெளிக்கொண்டு வர பெரிதும் உதவும் என போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
—வேந்தன்







