சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் ஸ்ரீவக்ரகாளியம்மன் கோயிலில் ரிஷி பஞ்சமி பூஜையை முன்னிட்டு, மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ வக்ரகாளி அம்மன்
ஆலயத்தில் ரிஷி பஞ்சமி தினத்தை முன்னிட்டு மகா யாகம் நடைபெற்றது. ஸ்ரீ வக்ரகாளி அம்மனுக்கு அமாவாசை, பௌணர்மி, பஞ்சமி திதி ஆகிய நாட்களில் விஷேச அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதூர்த்தி முடிந்த அடுத்த நாள் ரிஷி பஞ்சமி திதி தினத்தில் வக்ரகாளி அம்மனுக்கு மகா யாகம் நடத்தப்பட்டது. முன்னோர்களை சாந்தி படுத்த நடைபெற்ற இந்த மகா யாகத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காளி அம்மனை வழிப்பட்டனர்.
ஸ்ரீ வக்ரகாளி அம்மன் கோயிலில் அம்மா வாசை கழித்து 5 – வது நாளான பஞ்சமி
திதியில் அம்மன் காலடியில் வைக்கப்பட்ட தேங்காவை வாங்கி சென்று வீட்டு வாசலில் கட்டி வந்தால் கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலுவதாகவும் மற்றும் ஸ்ரீ வக்ரகாளி அம்மனுக்கு 5 தீபம் ஏற்றி செவ்வரளி பூவை சாற்றி வழிப்பட்டு வந்தால் கேட்டது கிடைப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
ரூபி.காமராஜ்







