முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

தலிபான்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்

தலிபான்களுடன் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது. தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்றது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க படை சரியான திட்டமிடப்படாமல் விலக்கிக்கொள்ளப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது. ஆப்கனில் இருந்து பல நாடுகள் தங்களது தூதரங்களை மூட தொடங்கியுள்ளன. இந்தியாவும் அங்கிருந்த அதிகாரிகளை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டது. இருப்பினும் தற்போது அங்கிருக்கும் உள்ளூர் அதிகாரிகள் மூலம் அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தலிபான்கள் தொடர்புடைய ஃபேஸ்புக் பக்கத்தை முடக்குவதாக நேற்று அறிவித்தது. அமெரிக்கா சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில்,  தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளையும் முடக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் அருங்காட்சியகங்களை மூட மத்திய அரசு உத்தரவு!

Ezhilarasan

பொதுத்தேர்தல் சவாலாக இருந்தது: சத்யபிரதா சாகு

Ezhilarasan

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் தகவல்

Halley karthi