கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க ஆப்கன் அணிக்கு பச்சை கொடி காட்டிய தலிபான்கள்

ஆஸ்திரேலியாவுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து, அந்த தாக்குதலில் ஈடுபட்ட பின்லேடனை அழிப்பதற்காக…

ஆஸ்திரேலியாவுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு தலிபான்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து, அந்த தாக்குதலில் ஈடுபட்ட பின்லேடனை அழிப்பதற்காக அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்தது. கடந்த 20 வருடமாக அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றின.

இந்நிலையில், ஆப்கன் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு தலிபான்கள் தரப்பில் அனுமதி அளித்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.