அயர்லாந்து நாடு வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 1,900 கோடியை அபராதமாக விதித்துள்ளது.
உலக அளவில் முன்னணி தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. இது ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான ஒன்றாகும். இந்த செயலி பயனர்களை தக்க வைத்துக்கொள்ள அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ் அப் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனியுரிமை கொள்கை ஒன்றை அறிவித்தது. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பயனர்கள் தொடர்ந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பலமுறை தனியுரிமை கொள்கை ஏற்றுக்கொள்வதற்கான கடைசி நாட்களை மாற்றியமைத்தது. இருப்பினும் பயனர்கள் மாற்று செயலியை தேடத்தொடங்கினர். ஆனால், வாட்ஸ் அப்பின் தனிநபர் கொள்கையை பெரும்பாலானவர்கள் ஏற்க மறுத்தனர். இந்நிலையில், இதுபோன்றதொரு விவகாரத்தில் அயர்லாந்து சுமார் 1,900 கோடியை அபராதமாக விதித்துள்ளது.
ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்களை எவ்வாறு வாட்ஸ் அப் சேகரித்து பேஸ்புக்கோடு பயன்படுத்துகிறது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கு தெரிவிக்க தவறியதால் வாட்ஸ் அப்பிற்கு சுமார் 225 மில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 1,900 கோடியை அபராதமாக விதித்துள்ளது.







