முக்கியச் செய்திகள் இந்தியா

இரவில் தாஜ்மஹாலை பார்வையிட நாளை முதல் அனுமதி

தாஜ் மஹாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட நாளை முதல் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாஜ்மஹாலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வந்த தால், கடந்த ஒரு வருடமாக, அங்கு சென்று பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

பின்னர் பகல் நேரத்தில் பார்வையிட, ஜூலை 16 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இரவு நேரத்தில் நிலவு ஒளியில் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) முதல், இரவு நேர பார்வைக்காக தாஜ்மஹால் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் பரிந்துரையின்படி இரவு நேரத்தில் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது.

இரவு எட்டரை மணியில் இருந்து பத்து மணி வரை, அரை மணிநேரத்துக்கு ஒரு முறை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக இந்தியர்களுக்கு 510 ரூபாயும் வெளிநாட்டினருக்கு 750 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சென்னை உள்பட 35 நகரங்களில் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை: அமேசான்

Saravana Kumar

முழு ஊரடங்கில் மெட்ரோ ரயில் சேவை ரத்து!

Ezhilarasan

அண்ணாமலை பல்கலை: துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்