31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

தாஜ்மஹால், குதுப்மினாரை இடிக்க வேண்டும்; இந்து கோயில்கள் கட்ட வேண்டும் – பிரதமருக்கு பாஜக எம்.எல்.ஏ கடிதம்

தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்துவிட்டு, அங்கு இந்துக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முகலாயர்களால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் முக்கியச் சின்னங்களாக திகழ்ந்து வருவன குதுப் மினார் மற்றும் தாஜ்மஹால். சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் பார்த்துச் செல்லும் இடமாக இவை அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு முக்கிய சின்னங்களை இடிக்க வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ ரூப்ஜோதி குர்மி தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை உடனடியாக இடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த இடங்களில், உலகளவில் சிறப்பான வடிவமைப்பைக் கொண்ட கோயில்களைக் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், உலகில் எங்குமே இல்லாத வகையில் அந்த கோயில்கள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ரெப்போ வட்டி விகிதம் உயர்வு இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மேலும், இந்த கோயில்களை கட்டுவதற்காக தனது ஒன்றரை வருட சம்பளத்தை நன்கொடையாக அளிக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அசாம் எம்.எல்.ஏ-வின் இந்த கோரிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading