தனது உடல் எடையை சரியாக பேணுவதற்காக தனியாக ட்யட்டீசியன் வைத்திருப்பதாகவும் அவருக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு பல திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் உச்ச நட்சத்திர நடிகையாக தன்னை டாப்ஸி உருவாக்கி கொண்டார். நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிலும் விளையாட்டு வீராங்கனைகளின் பயோபிக்குகளில் ஆர்வமாக டாப்ஸி நடித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ”சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன்” – ஓபிஎஸ்
தனது உடலையும் உடல் அமைப்பையும் சரியாக டாப்ஸி பேணி வருகிறார். இதற்காக ட்யட்டீசியன் ஒருவருக்கு மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம் கொடுப்பதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். இந்த விஷயம் என் தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்றும் இதற்காக இவ்வளவு பணம் செலவு செய்கிறாயா என்று அவர் கேட்பார் என்றும் டாப்ஸி தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைக்கு செலவு செய்வதற்கு பதிலாக இப்போது அதில் ஒரு பகுதியை டயட்டீசியனுக்கு சம்பளமாக ஒதுக்குவதில் தப்பில்லை என்று டாப்ஸி கூறியுள்ளார்.