டி20 உலக கோப்பை; பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர் 2022, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று…

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடர் 2022, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் பத்து ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா, நிலையான விளையாட்டை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இணை 113 ரன்கள் எடுத்தது.

20வது ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்த இறுதி ஓவரில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 160 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. விராட் கோலி 82 ரன்கள் இந்திய அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றது. இந்திய அணி வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில், “இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றது! சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துகள். குறிப்பிடத்தக்க உறுதியை வெளிப்படுத்திய அற்புதமான இன்னிங்சிற்காக விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் போட்டிகளுக்கும் வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.