டி 20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது இலங்கையில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இப்போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்டனர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டன்னுக்கு பதிலாக ரெஹான் அகமது ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி மாற்றமின்றி களமிறங்கியுள்ளது.
அணி விவரம்
இங்கிலாந்து : பில் சால்ட், ஜோஸ் பட்லர் (WK), ஹாரி புரூக் (C), ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ரெஹான் அகமது ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷித்.
நியூசிலாந்து : ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் (WK), ரச்சின் ரவீந்திர, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர் (C), கோல் மெக்கோஞ்சி, மேட் ஹென்றி, இஷ் சோதி மற்றும் லாக்கி பெர்குசன்.







