டி20 உலக கோப்பை; இங்கிலாந்து அணியின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

டி20 உலக கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.98 கோடி தொகை பரிசு கிடைத்துள்ளது. 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. 16…

டி20 உலக கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.98 கோடி தொகை பரிசு கிடைத்துள்ளது.

8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தல் நடைபெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. 2வதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

உலகக் கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.1.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.12.98 கோடியும், 2வது இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 6.49 கோடியும் கிடைத்துள்ளது. அரையிறுதியில் தோல்வியை சந்தித்து வெளியேறிய இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா ரூ.3.24 கோடி பெற்றுள்ளன. சூப்பர் 12 சுற்றிலிருந்து வெளியேறிய 8 அணிகளும் தலா ரூ.56.77 லட்சம் பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.45.40 கோடியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.