நான்கு ஓவர்களில் 22 டாட் பந்துகளை வீசி, 3 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தி இருக்கிறார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. இலங்கை, பங்களாதேஷ், ஓமன் என எட்டு அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்று வருகின்றன. இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே சில அணிகள் பயிற்சிப் போட்டிகளில் ஆடி வருகின்றன. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்து மிரட்டியது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் முகமது நபி, 4 ஓவர்கள் பந்துவீசி, 2 மெயிடன் ஓவர்களுடன் வெறும் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் மொத்தம் வீசிய 24 பந்துகளில் 22 டாட் பந்துகளை வீசியுள்ளார். இதையடுத்து அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.