முக்கியச் செய்திகள் தமிழகம்

10.5% உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீடு மனு-இன்று விசாரணை

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்துக்கு எதிரான மேல்முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அப்போதைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது.

அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி 25க்கு மேற்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அரசியல் ஆதாயத்துக்காக தேர்தலை கணக்கில் வைத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

விசாரணையில் வாதங்களை கேட்ட நீதிபதிகள், “முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், எனவே, ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாகவும்” உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 15-க்கும் மேற்பட்ட கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர். காவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

Ezhilarasan

‘சொமாட்டோ’ ஊழியரால் தாக்கப்பட்ட பெண் வாடிக்கையாளர்: வைரலான வீடியோ

Jeba Arul Robinson

யூரோ கோப்பை தொடக்க ஆட்டத்தில் இத்தாலி வெற்றி!