26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

கனல் கண்ணன் மீது விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி விழாவில் பேசிய மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினரால் ஆகஸ்ட் 15ஆம் தேதி கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். பின்னர், 4 வாரங்களுக்கு இரு வேளையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்தி வைக்க வேண்டுமென கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை நாளை (செப்டம்பர் 10) முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 18ம் தேதி முதல் விசாரணை அதிகாரி முன்பு மீண்டும் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 25 பேர் பலி

Mohan Dass

வென்றெடுத்தோம் இடப் பங்கீட்டை…கொண்டாடுவோம் இனிப்பு வழங்கி…!

Jeba Arul Robinson

திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சாலையில் நடந்து சென்ற அவலம்!

Web Editor