முக்கியச் செய்திகள்

அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர், கடந்த 2004ம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதற்காக 2006ம் ஆண்டு வங்கி அதிகாரிகளால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த பணியிடைநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தற்போது உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மத்திய பொருளாதார விவகாரத்துறையின் சுற்றறிக்கையின் படி, அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வைக்கலாம் என்ற சுற்றறிக்கையை வங்கி நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தின் 2012 உத்தரவின் படி, வங்கி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கெளரிசங்கருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவை இல்லாமல் உடனே வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

G SaravanaKumar

யாசகம் கேட்கும் பெண்; மனதை உருக்கும் வீடியோ!

Jayapriya

காஷ்மீர் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா

G SaravanaKumar