முக்கியச் செய்திகள் தமிழகம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்குபாலம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக ளுடனான ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 58 ரயில்வே பாலங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்காக தமிழ்நாட்டை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து மண்டலத்திற்கு ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் தரத்தில் விரைவில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் தொங்கு பாலம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல் குவாரி அனுமதியில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும்; எடப்பாடி பழனிசாமி

Arivazhagan Chinnasamy

ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் மருத்துவ சாதனங்கள் பூங்கா

Halley Karthik

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தாயார் மறைவு-பிரதமர் மோடி இரங்கல்

Web Editor