இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியை காண வந்த ரசிகர்களால் சேப்பாக்கம் சாலை
முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த கடைசி ஒரு நாள்
போட்டியில் ஆஸ்திரேலியா அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த கடைசி ஒரு நாள் போட்டியை காண சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து
36,400 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். சென்னை சேப்பாக்க மைதானத்தில்
ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது இதுவே முதல் முறை என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த கடைசி ஒரு நாள் போட்டி முடிந்த நிலையில் ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக வெளியே சென்றதால் சாலை முழுவதும் வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் சேப்பாக்கம் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் சேப்பாக்கம் சாலை, அண்ணா சாலை , திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற
பகுதிகள் முழுவதும் போக்குவரத்து பாதிக்கபட்டது. நூறுக்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள் அரை மணி நேரம் போராடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடங்களை சரி செய்தனர்.







